Pages

Thursday, May 31, 2012

போட்டோஷாப் பாடம்-10

 இதுவரை நடத்தியுள்ள பாடம் வைத்து என்னவெல்லாம் செய்யலாம் என பார்க்கலாம். அதற்குள் இரண்டு -மூன்று டூல்கள் பற்றி ஒரு சின்ன முன்னோட்டம் பார்த்து கொள்ளலாம்.
( வரிசையாக பாடங்களை பார்த்துவரும் சமயம் அந்த டூல்கள் பற்றி விரிவாக பார்த்துக்கொள்ளலாம்.)

முதலில் Images பற்றி பார்க்கலாம். இதன் மூலம் போட்டோவை எப்படி டூப்ளிகேட் எடுப்பது,போட்டோ அளவு மாற்றுதல் மற்றும் போட்டோவின் ரெசுலேசன் மாற்றுதல் பற்றி பார்க்கலாம். முதலில் நீங்கள் போட்டோஷாப் திறந்து கொள்ளுங்கள். அடுத்து உங்கள் கணிணியில் உள்ள ஒரு புகைப்படத்தை திறந்து கொள்ளுங்கள். நான் இப்போது இந்த மயில் படத்தை திறந்து உள்ளேன்

                                  alt

அடுத்து நீங்கள் மெனுபார் பார்த்தீர்களே யானால் உங்களுக்கு மூன்றாவதாக image இருக்கும் . அதை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆ
கும்.  



                                            alt

இதில் மூன்றாவது வரியில் உள்ள Dublicate கிளிக் செய்யவும்.  



                                   alt

உங்களுக்கு இந்த மாதிரியான விண்டோ ஓப்பன் ஆகும். ஓகே கொடுக்கவும்    


                               alt

இப்போது நீங்கள் முதலில் திறந்த படத்தை (ஒரிஜினல்) கிளிக் செய்து மூடிவிடவும். அடுத்து இப்போது உங்களுக்கு நீங்கள் டூப்ளிகேட் காப்பி செய்த படம் மட்டும் இருக்கும். இதில் நீங்கள் என்னவேண்டும் ஆனாலும் செய்யலாம். சரி அது அப்படியே இருக்கட்டும். இப்போது இந்த போட்டாவின் அளவுகளை மாற்றுவது பற்றி பார்க்கலாம். நீங்கள் Image உள்ளImage Size அல்லது


கீ போர்ட்டில் Alt+Ctrl+I-தட்டச்சு செய்யவும்.
உங்களுக்கு நீங்கள் தேர்வுசெய்த படத்தின் நீளம்-அகலம் - மற்றும் ரெசுலேஷன் கிடைக்கும்.


                               alt

இதில் உள்ள அகலம் (Width) காலத்தில் உள்ள அகலத்தை நீங்கள் மாற்ற நீளமானது அதற்கேன உள்ள Starndard அளவில் தானே மாறிவிடும். அதுபோல் படத்தை நீங்கள் அங்குலத்தில் செட் செய்தால் படம் அங்குலத்திலும் -சென்டிமீட்டர்-செட் செய்தால் சென்டிமீட்டரிலும் வரும்.இந்த அளவுகள் நீங்கள் மாற்றிய அகலத்திற்கு அடுத்த காலத்தில் பார்க்கலாம்.,இப்போது நான் கீழ்கண்ட படத்தில் அகலத்தை 6 அங்குலம்(Inch) என மாற்ற நீளமானது தானே 4.5 

அங்குலம் மாறிவிட்டதை காண்பீர்கள். 

                               alt



மாற்றிய அளவில் வந்துள்ள புகைப்படம் கீழே கொடுத்துளேன்


                             .alt

இனி Resolution பற்றி பார்க்கலாம் படத்தின் தரமானது ரெசுலேசனை அதிகமாகமாற்றினால் அழகாகவும்-குறைவாக மாற்றினால் தரம் குறைந்தும் காணப்படும். நாம் நமது புகைப்படத்தில் நார்மலாக 200-லிருந்து 300 வைத்துக்கொள்ளலாம். அதுபோல் பெரிய பேனர்கள் போடும் சமயம் 450 லிருந்து 600 ஆக மாற்றிக்கொள்ளலாம். உங்களது படங்கள் ஏதாவது பேனர் சைஸ் போடவேண்டும் என்றால் பேனர் அளவை பொருத்து 450 லிருந்து 600 பிக்ஸல் வரை அளவை மாற்றிபிரிண்ட் செய்ய கொடுக்கவும். இப்போது நான் இந்த புகைப்படத்தை 70 ரெசுலேஷனாக மாற்றி 


உள்ளேன் .            alt



இதன் நீள அகலங்களை மாற்ற வில்லை ஆனால் ரெசுலேசனை மட்டும் மாற்றியுள்ளேன்


                                     alt

அதேபோல் ரெசுலேசனை அதிகமாக மாற்றி அதாவது 400 வைத்து படத்தை மாற்றிஉள்ளேன்   



                                alt


ரெசுலேசனை மாற்றியபின் வந்த படம் கீழே கொடுத்துள்ளேன்.


                                alt

நீங்கள் இதுபோல் ஒரு படத்தை எடுத்துக்கொண்டு ரெசுலேசனை மாற்றி அருகருகே வைத்துக்கொண்டு பாருங்கள் . வித்தியாசத்தை உணர்வீர்கள். எல்லா வேலையும் முடிந்துவிட்டது. இப்போது இந்த படத்தை மூடிவிட உங்களுக்கு கீழ்


கணட விண்டோ கிடைக்கும்.   alt


இதில் நீங்கள் yes கிளிக் செய்தால் படமானது நீங்கள் விரும்பும் போல்டரில் சேவ் ஆகும். உங்கள் ஒரிஜினல் படம் அப்படியே இருக்கும். இதை போல் படம் எடுத்து மாற்றங்கள் நிறைய செய்து பாருங்கள். 


                                            alt



மேலே உள்ள படத்தை நான் ஏற்கனவே நடத்திய மார்க்யு டூல் கொண்டு படங்களை கீழ்கண்டவாறு கட் செய்துள்ளேன். 



அதுபோல் நீங்களும் முயற்சி செய்து பார்க்கவும். alt



கீழே உள்ளவற்றில் ஓட்டளித்து இந்த பதிவை அனைவரும் பார்க்க உதவிடுங்கள். வருகைக்கு நன்றி....

0 comments:

Post a Comment