வீடியோவிற்கு ஏற்ற பின்னணிப் பாடல்களையோ அல்லது பின்னணி செய்திகளையோ, உரைகளையோ சேர்க்க வேண்டும். இவ்வாறு வீடியோவில் சில மாற்றங்களைச் செய்து வெளியிட்டால் வீடியவோவானது முழுமையடையும்.
இவ்வாறு வீடியோ எடிட்டிங் செய்ய வீடியோ எடிட்டர்களைத்(Video Editors) தான் நாட வேண்டும் என்று அவசியமில்லாமல் செய்துவிட்டது தற்போதைய தொழில்நுட்ப உலகம்(Technology World). உங்கள் சொந்த வீடியோக்களை, வீட்டு விஷேஷங்களின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களை நீங்களே டிசைன் செய்யலாம். நீங்களே வீடியோ எடிட்டிங் செய்யலாம். இதற்காக நிறையவே மென்பொருட்கள் வந்துவிட்டது. அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருக்கும் வீடியோ எடிட்டிங் மென்பொருள் VIDEOPAD VIDEO EDITOR.
(வீடியோக்களை எடுக்கும்போது அங்கு நிலவும் வெளிச்சம், மற்றும் சூழ்நிலைக்கேற்றவாறு வீடியோ படங்கள் சற்று மங்கலாகவோ, அல்லது அதிக வெளிச்சத்துடனோ இருக்கும். இதையும் வீடியோ சாப்ட்வேர் கொண்டு சரி செய்ய முடியும். மேலும் வேண்டாத பகுதிகளை வெட்டவும். எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு ஏற்றவாறு தனியாக Audio கிளிப்புங்களை சேர்க்கவும், எடுத்த வீடியோ காட்சிகளில் சரியாக இல்லாத பகுதிகளை, தேவையில்லாத பகுதிகளை வெட்டி எடுக்கவும், மேலும் ஒரு சில Video Effect களைக் கொடுக்கவும் பயன்படுகிறது Video Edting software.)
இதில் நான் பயன்படுத்தும் Videopad Video Editor என்னும் மென்பொருளைப் பற்றிப்பார்ப்போம். முதலில் இந்த மென்பொருள் யூசர் ப்ரண்லி ஆகையால் பயன்படுத்துவது என்பது மிக மிக எளிது.
மென்பொருளிலுள்ள சிறப்பு வசதிகள்:
- எளிதாக வீடியோ கிளிப்புகளை இழுத்துவிட்டு (Drag and Drop) வேலை செய்யும் வசதி.
- வீடியோ effects and வீடியோ transitions, video வேகத்தைக் கட்டுப்படுத்தும் வசதி.
- avi, wmv, 3gp, wmv and divx. போன்ற வகை கோப்புகள் மென்பொருள் மூலம் எடிட் செய்யும் வசதி.
- avi, mpeg, wmv, divX, Xvid, mpeg1, mpeg2, mpeg4, mp4, mov, vob, ogm, .3gp, H.264, RM போன்ற வீடியோ பார்மட்களில் வீடியோக்களை இம்மென்பொருளில் திறந்து பயன்படுத்தும் வசதி.
- bmp, gif, jpg, jpeg, png, tif, tiff, psd, tga, pcx போன்ற வகை படக்கோப்புகளை திறந்து பயன்படுத்தும் வசதி.
- wav, mp3, mp2, mpga, m4a, ogg, avi, mid, flac, aac, wma, au, aiff, ogg, raw, dvf, vox, cda போன்ற அனைத்து ஆடியோ கோப்புகளை திறந்து பயன்படுத்தும் வசதி.
- எடிட்டிங் செய்து மாற்றம் செய்த கோப்புகளை DVD, CD, Blu-ray Discs, HD-DVD போன்றவைகளில் பர்ன் செய்து பயன்படுத்தும் வசதி.
- Windows 7, XP and Vista போன்ற இயங்குதளங்களில் இயங்குகிறது.
வீடியோ எடிட்டிங் சாப்ட்வேர் டவுன்லோட் செய்ய தரவிறக்கச்சுட்டி(Download Link) Click
Tweet | ||||
0 comments:
Post a Comment