Pages

Friday, May 24, 2013

போட்டோஷாப் பாடம்- 13 (Stroke Tool)

போட்டோஷாப்பில் இன்று Storke பற்றி பார்க்கலாம். ஒரு படத்தினை

சுற்றி அழகான கலரில் பார்டர் இதில் செய்யலாம். அதைப்பற்றி இன்றைய
பாடத்தில் காணலாம்.முதலில் இந்த ரோஜாப் பூவினை எடுத்து உள்ளேன்
                               alt


இப்போது இந்த பூவினை சுற்றி மார்க்யு டூலால் செவ்வகம் வரைந்துள்ளேன்.
படத்தினை பாருங்கள்

alt

இப்போது நீங்கள் மவுஸில் ரைட் கிளிக் செய்ய உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் உள்ள
Feather உங்களுக்கு தேவையான Radius வைத்துக்கொள்ளுங்கள்.
ஓ.கே. கொடுங்கள்

alt


வழக்கப்படி Ctrl+C - Ctrl+N-Enter -Ctrl+V செய்யுங்கள். உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

alt

இப்போது பூவினை சுற்றி மார்க்யு டூலால் ஓரத்தில் செவ்வகம்
வரையுங்கள். அடுத்து Edit -கிளிக் செய்து அதில் உள்ள Stroke
கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்
ஆகும்

alt

இதில் Width உங்களுக்கு எந்த பிக்ஸல் அளவிற்கு வேண்டுமோ
அதை தட்டச்சு செய்யுங்கள்.அதன் கீழே உள்ள கலர் பாக்ஸில்
நீங்கள் கிளிக் செய்ய உங்களுக்கு கலர் பிக்கர் -Color Picker -வரும்.
உங்களுக்கு தேவையான நிறத்தினை தேர்ந்தெடுங்கள். நான் சிகப்பு
கலரினை தேர்வு செய்துள்ளேன்.
அடுத்துள்ளது நீங்கள் தேர்வு செய்த கட்டத்திற்கு உள்புறம் - நடுவில்-
வெளிப்புறம் - இதில் எங்கு கலர் கோடு வரவேண்டுமோ -inside-
center-out side -இதில் எது வேண்டுமோ அதை

தேர்வு செய்யுங்கள். கீழே உள்ள படத்தினை பாருஙகள்
alt

இப்போது சிகப்பு கலரின் முன் அதைப்போல் மார்க்யு டூலால்
செவ்வகம் வரையுங்கள். முன்பு போல் செய்யுங்கள்alt

நான் பச்சை கலரை கொடுத்துள்ளேன். கீழே உள்ள படத்தை பாருங்கள்.alt




தனியே பார்டர் போடுவது பார்த்தோம். ஆனால் படத்தை சுற்றியே
கோடு வருவது பற்றி பார்க்கலாம். நான் திரிஷா அவர்களின் படத்தை
எடுத்துக்கொண்டுள்ளேன்alt






பென்டூல் மூலம் அவரை சுற்றி கட் செய்தேன். படத்தை தனியே
காப்பி செய்தேன். கீழே உள்ள படத்தை பாருங்கள்.altalt





இப்போது முன்பு சொல்லிகொடுத்தது மாதிரியே செய்யுங்கள்.
கீழே உள்ள படத்தினை பாருங்கள்.alt



இப்போது அடுத்துள்ள படத்தினை பாருங்கள். பச்சை நிறத்தினை
அடுத்து மஞ்சள் நிறம் தேர்வு செய்துள்ளேன்.alt



அடுத்துள்ள படத்தினை பாருங்கள். சிகப்பு நிறம் தேர்வு செய்து
உள்ளேன். கீழே உள்ள படத்தினை பாருங்கள்.alt



கீழே உள்ளவற்றில் ஓட்டளித்து இந்த பதிவை அனைவரும் பார்க்க உதவிடுங்கள். வருகைக்கு நன்றி....

0 comments:

Post a Comment