Pages

Monday, May 14, 2012

எம்.எஸ்.ஆப்பிஸ்-2010ல் இருப்பியல்பாக உள்ள SAVE Location யை மாற்றுவது எப்படி?


மைக்ரோசாப்ட்டின் புதிய ஆப்பிஸ் தொகுப்பான 2010 மிகவும் சிறப்பாக உள்ளது. இந்த ஆப்பிஸ் தொகுப்பானது முந்தைய பதிப்புகளை விட மேம்படுத்தப்பட்டு தற்போது வெளிவந்துள்ளது, இந்த ஆப்பிஸ் தொகுப்பில் Default save Location யை நாம் மாற்றி அமைத்து கொள்ள முடியும். இது ஆப்பிஸ் தொகுப்புகள் அனைத்துக்கும் பொருந்தும் WORD,EXCEL,POWERPOINT என அனைத்து பயன்பாடுகளுக்கும் இது பொருந்தும்.

இந்த ஆப்பிஸ் தொகுப்பில் Default save Location யை மாற்ற நாம் எடுத்துக்காட்டாக வேர்ட் பயன்பாட்டினை எடுத்துகொள்வோம். முதலில் File > Option என்பதை தேர்வு செய்யவும்.


தோன்றும் சாளர பெட்டியில் save என்னும் பட்டியை தேர்வு செய்யவும். அதில்Default file location என்ற இடத்தில் உள்ள  Browse என்ற பட்டனை அழுத்தி தோன்றும் விண்டோவில் நீங்கள் விருப்பும் இட்த்தினை தேர்வு செய்யவும். பின் OK பட்டனை அழுத்தவும்.


இப்போது நீங்கள் குறிப்பிட்ட அந்த இடத்தில் மட்டுமே பைல்கள் Save ஆகும்.

குறிப்பு: EXCEL மற்றும் PowerPoint ல்  Browse என்ற பட்டன் இருக்காது   நீங்களே பாத்தினை குறிப்பிட்டு கொள்ள வேண்டும்.


கீழே உள்ளவற்றில் ஓட்டளித்து இந்த பதிவை அனைவரும் பார்க்க உதவிடுங்கள். வருகைக்கு நன்றி....

0 comments:

Post a Comment