Pages

Monday, May 14, 2012

வேர்ட் - 2010 ல் பேக்ரவுண்டில் இமேஜ்யை கொண்டுவருவது எப்படி


வேர்ட் 2010 - ல் பலவிதமான புதிய வசதிகள் உள்ளன. வேர்ட் தொகுப்பானது புதியதாக ஒரு டாக்குமெண்டை உருவாக்கவும். அதில் வேலைபாடுகளை செய்யவும் பயன்படுகிறது.  இதில் பல்வேறு விதமான வேலைபாடுகள் உள்ளன சாதாரண Font மாற்றத்தில் தொடங்கி பேக்ரவுண்டை மாற்றம் செய்வது வரை பல்வேறு வசதிகள் இந்த வேர்ட் தொகுப்பில் உள்ளது. இந்த வேர்ட் தொகுப்பில் இவ்வாறு பல்வேறு வசதிகள் நிறைந்திருந்தாலும் இது போன்ற வசதிகளை  எவ்வாறு பயன்படுத்துவது என்று பயனாளருகளுக்கு தெரிவதில்லை. இது போன்ற வசதிகள் மறைமுகமாகவே உள்ளது. பேக்ரவுண்டில் ஒரு கலரை அமைப்பதற்கு பதிலாக ஒரு புகைப்படத்தை அமைத்தால் எவ்வளவு சிறப்பாக பேக்ரவுண்டில் புகைப்படத்தை எவ்வாறு கொண்டுவருவது என்று கீழே காண்போம்.

முதலில் வேர்ட் 2010 யை ஒப்பன் செய்து கொள்ளவும் பின் மெனுபார் தொகுப்பில் Page Layout என்பதை தேர்வு செய்யது  தோன்றும் பிரிவில்  Page Color என்பதை தேர்வு செய்யவும். அதில் Fill Effects என்பதை தேர்வு செய்யவும்.


Fill Effects என்பதை கிளிக்   செய்தவுடன் தோன்றும் விண்டோவில், Picture என்னும் பட்டியை தேர்வு செய்து எந்த படம் பேக்ரவுண்டாக வேண்டுமோ அதனை தேர்வு செய்து கொள்ளவும்.


பின் ஒகே செய்துவிடவும் பின் நீங்கள் விரும்பிய படமானது பேக்ரவுண்டில் இருக்கும். இதில் டெக்ஸ்டை டைப் செய்ய வேண்டுமெனில் டெக்ஸ்ட் கலரை மாற்றம் செய்து கொண்டு வேர்ட் டாக்குமெண்டை உருவாக்க முடியும்.


கீழே உள்ளவற்றில் ஓட்டளித்து இந்த பதிவை அனைவரும் பார்க்க உதவிடுங்கள். வருகைக்கு நன்றி....

0 comments:

Post a Comment