நாம் பிறருடன் கணினியை பகிரும் போது முக்கிய Folder மற்றும் File களை மறைத்து வைக்க விரும்புவோம். அவற்றை தனித்தனியே மறைத்து வைப்பதை விட ஒரு முழு Drive வில் மறைத்து வைப்பது எளிது. அதற்க்கான வழிமுறையை பற்றி பார்ப்போம்.
வழிமுறைகள் :
- windows key + R ஐ என்டர் செய்வதன் மூலம் Run விண்டோவை திறந்து "cmd" என டைப் செய்து தோன்றும் விண்டோவில் "diskpart" என டைப் செய்து என்டர் தட்டவும்.அடுத்து "list volume" என டைப் செய்து என்டர் கொடுக்கவும் .
- அடுத்து வரும் திரையில் Hard Disk ன் அனைத்து பகுதிகளும் படத்தில் உள்ளது போன்று தோன்றும்.
- அங்கு நீங்கள் மறைக்க விரும்பும் பகுதியை உதாரணமாக படத்தில் உள்ளது போன்று Volume 3 ஐ மறைக்க விரும்பினால் “select volume 3″ என டைப் செய்து என்டர் கொடுக்கவும்.
- அடுத்து வரும் திரையில் “remove letter E:” என டைப் செய்து என்டர் கொடுக்கவும் அவ்வளவுதான் நீங்கள் மறைக்க விரும்பிய Volume 3 ஆனது மறைந்து விடும்.
- மறைக்கப்பட்ட Drive ஐ கொண்டு வர 'assign letter E:" என டைப் செய்து என்டர் கொடுக்கவும்.
Tweet | ||||
0 comments:
Post a Comment