Pages

Monday, September 9, 2013

ஐகான் (Icon) களை இலவசமாக இணையத்தில் இருந்து பெற.....

      பிரபலமான ஐகான்கள், ஐகான் பிரம்மாக்கள் இப்படி ஐகான் பிரியர்கள் அசந்து போகும் அளவுக்கு அருமையான தேடியந்திரமாக  Iconarchive  இணையதளம் வசிகிக்கிறது.
                எந்த விதமான ஐக்க்கான் தேவை என்றாலும் சரி ஐக்கான்களுக்கான இந்த தேடியந்திரம் அதனை எடுத்து தருகிறது. தகவல்களை கூகிளில் தேடலாம். அதிலேயே புகைப்படங்களையும் தேடிக் கொள்ளலாம் என்றாலும் புகைப் படங்களை தேட என்று பிரத்யேக தேடியந்திரங்கள் இருக்கின்றன.

                   
         புகைப்படங்கள் என்று பொதுவாக சொன்னாலும் அவற்றிலும் பல ரகங்கள் இருக்கின்றன. நிழற்படங்கள், சித்திரங்கள், கோட்டோவியம் இவற்றோடு ஐக்கான்களும் அடங்கும். குறிப்பிட்ட பொருளை காட்சி ரூபமாக உணர்த்த பயன்படும் அடையாள சின்னங்களான ஐகான்கள் பல இடங்களில் பயன்படுகின்றன. 
  மேலும் ஐக்கான்கள் அவற்றுக்கான வகைகளின் கீழும் பட்டியலிடப்பட்டுள்ளன இசைமயமான ஐக்கான்கள், கார்ட்டுன் ஐக்கான்கள், காதல்ஐக்கான்கள், கொண்டாட்ட ஐக்கான்கள், கலாச்சார ஐக்கான்கள் என் எண்ணற்ற வகையில் ஐக்கான்களை காணலாம். புதிய ஐக்கான்கள், பிரபலமான ஐக்கான்கள் என்றும் தேடிப்பார்க்கலாம்.
               முகப்பு பக்கத்திலேயே இன்று தேடப்பட்ட ஐக்கான்கள், நேற்றைய ஐக்கான்கள் என்றும் அழகாக தொகுக்கப்பட்டுள்ளன. ஐக்கான்களை உருவாக்கிய கலைஞர்களுக்கு என்று தனி பகுதியும் உள்ளது. 
இங்கு செல்ல இங்கே Click செய்வும்
கீழே உள்ளவற்றில் ஓட்டளித்து இந்த பதிவை அனைவரும் பார்க்க உதவிடுங்கள். வருகைக்கு நன்றி....

0 comments:

Post a Comment