Pages

Tuesday, September 17, 2013

ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் கணினிக்கு இணைய இணைப்பு ( Internet Connection) ஏற்படுத்துவது எப்படி?

                      

             இந்த பதிவு மூலம் நாம் பார்க்க போவது ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் Laptop, Pc மற்றும் Tablet போன்றவைகளுக்கு எவ்வாறு Wi-Fi தொடர்பு மூலம் இணைய இணைப்பு (Internet Connection) ஏற்படுத்துவது என்பதை பற்றி பார்க்க போகிறோம். இந்த செயல் முறையை ஏற்படுத்த தங்கள் மொபைல் ஆண்ட்ராய்டு தொழில் நுட்பத்தில் இயங்குபவையாக இருக்க வேண்டும் மற்றும் அதில் Wi-Fi மூலம் இணைய இணைப்பு ஏற்படுத்த கூடிய சாப்ட்வேர் நிறுவபட்டு இருக்க வேண்டும்.

எவ்வாறு செயல்படுத்துவது என்பதை பார்க்கலாம்.

  1. மொபைலில் Setting மெனுவுக்கு போகவும்.
  2. அடுத்து Wireless and Network செல்லவும்.
  3. அடுத்து Tethering and portable hotspot செல்லவும்.
  4. அதில் சிறிய portable wi-fi hotspot setting என்பது கானப்படும். அதை கிளிக் செய்யவும்.
  5. இதனுள் இரண்டு மெனுக்கள் கானப்படும். அதில் configure portable wi-fi  hotspot என்பதை கிளிக் செய்யவும்.
  6. அதில் Network SSID என்பதில் தங்கள் மொபைல்மாடல் பெயர் கொடுக்கபட்டு இருக்கும் அதில் வேண்டுமானால் உங்கள் பெயரை வைத்து கொள்ளலாம்.
  7. அடுத்த மெனு Security இதில் நீங்கள் உங்கள் இணைய இணைப்பை யார்வேண்டுமானாலும் பயன்படுத்த Open என்பதை தேர்தெடுக்கலாம். குறிப்பிட்ட நபர்கள் மட்டும் பயன் படுத்த WAP2PSK என்பதைதேர்ந்தெடுத்து பாஸ்வேர்டு அமைத்து கொள்ளலாம். பிறகு save கொடுக்கவும்.
  8. மேல் புறம் save கொடுத்த பிறகு வெளியில் wi-fi Hotspot என்பதில் டிக் செய்யவும். இப்போது சிறிய இடைவெளியுடன் ஒரு புதிய லோகவுடன் மொபைல் மேல் புறத்தில் ஒரு புதிய ஊதா நிற சிம்பல் கானப்படும். அவ்வளவுதான் இனி உங்கள் மொபைல் ஒரு இணைய இணைப்பு wi-fi ஆக செயல் பட தொடங்கி விட்டது. இனி உங்கள்  Laptop, Pc மற்றும் Tablet களில்  இணைய இணைப்பை உபயோகிக்கலாம்.
கீழே உள்ளவற்றில் ஓட்டளித்து இந்த பதிவை அனைவரும் பார்க்க உதவிடுங்கள். வருகைக்கு நன்றி....

1 comments:

  1. அருமையான பதிவு

    ReplyDelete